புளியங்குடி பகுதியில் எலுமிச்சை விலை வீழ்ச்சி: கிலோ ரூ.20க்கு விற்பனை
சங்கரன்கோவில், புளியங்குடி பகுதிகளில் எலுமிச்சை பழங்களில் விலை வீழ்ச்சியால் விவசாயிகள், வியபாரிகள் வேதனை.
சங்கரன்கோவில், புளியங்குடி பகுதிகளில் சங்கரன்கோவில், புளியங்குடி பகுதிகளில் எலுமிச்சை பழங்களில் விலை வீழ்ச்சியால் விவசாயிகள், வியபாரிகள் வேதனை.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், புளியங்குடி பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் அனைவரும் எலுமிச்சை பயிரிட்டுள்ளனர். விவசாயிகள் சாகுபடி செய்த ஆயிரகணக்கான டன் கணக்கில் எலுமிச்சை பழங்கள் கேரளா, ஆந்திரா உட்பட பல்வேறு வெளிமாநிலங்ளுக்கும், வெளிமாவட்டங்களுக்கும் தினந்தோறும் ஏற்றுமதி செய்யபட்டு வந்த நிலையில் வடகிழக்கு பருவமழையானது கேரளா உட்பட வட மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் ஏற்றுமதியனாது மந்தமானதாக வியபாரிகள் தெரிவித்தனர்.
மேலும் தற்போது பெய்து வரும் மழையினால் சங்கரன்கோவில், புளியங்குடி பகுதிகளில் உள்ள எலுமிச்சை தோட்டங்களில் தண்ணீர் சூழ்ந்து எலுமிச்சை காய்கள், பழங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழுகி வருகிறது. குறைந்த அளவு எலுமிச்சை பழங்கள் வரத்து இருந்து ஒரு கிலோ இருபது ரூபாய் வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருதால் விவசாயிகள், வியபாரிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே தமிழக அரசு எலுமிச்சை பழங்களுக்கு கொள்முதல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாகும்.