சங்கரன்கோவில் மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு, சங்கரன்கோவில் மலர் சந்தையில், பூக்களின் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.;
சங்கரன்கோவில் மலர் சந்தையில், பூக்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் மலர்ச்சந்தையில், விநாயாகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவதையொட்டியும், தொடர்ந்து வெள்ளி, ஞாயிறு சுபமுகூர்த்த நாள்கள் வருவதாலும், பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
அதன்படி, மல்லி கிலோ ஆயிரம் ரூபாய், சம்பங்கி ஆயிரம் ரூபாய், பிச்சி ரூ1000, சேவல் பூ ரூ 200, கேந்தி ரூ200 என பூக்களி விலை உயர்ந்துள்ளது. அத்துடன், கடந்த சில நாட்களை காட்டிலும், இன்று அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்பட்டதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.