சங்கரன்கோவில்: சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்தவர் கைது
சங்கரன்கோவிலில், சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த நபரை, போலீசார் கைது செய்தனர்.;
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு, காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல், சங்கரன்கோவில் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லாட்ஜ் ஒன்றின் அருகே, மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த சிவகிரியைச் சேர்ந்த ராமர் என்பவரின் மகன் சிவன் என்பவர் பிடிபட்டர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து, போலீசார் கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.