சங்கரன்கோவில் சுற்றுவட்டாரத்தில் பலத்த மழை- மக்கள் மகிழ்ச்சி

சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது.;

Update: 2021-09-19 11:45 GMT

சங்கரன்கோவிலில் பெய்த மழை.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளான இருமன்குளம், ஆனையூர், நொச்சிகுளம், வீரிருப்பு, களப்பாகுளம், புளியம்பட்டி, குருக்கள்பட்டி ஆகிய சுற்றுவட்டாரப்பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது; சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. 

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்து  வந்த நிலையில், தற்போது பெய்த மழையினால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. அதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags:    

Similar News