மாணவர்களுக்கு விருது வழங்கி ஊக்கம் தரும் இருமன்குளம் பள்ளி ஆசிரியர்கள்

சங்கரன்கோவில் அருகே, பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் முற்றெழுதும் விருது வழங்கி, தலைமையாசிரியர், ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தினர்.

Update: 2021-09-09 12:45 GMT

இருமன்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு திருக்குறள் முற்றெழுதும் விருது வழங்கப்பட்டது. 

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே இருமன்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளயில் பயிலும் மாணவ மாணவிகள் கொரோனா கால விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கும் வகையிலும், திருக்குறளின் முக்கியத்துவத்துவத்தை உணர்த்தும் வகையிலும், திருக்குறள் முற்றெழுவதற்காக பயிற்சி  மேற்கொள்ளும்படி, ஆசிரியர்களால் அறிவுறுத்தப்பட்டது.

அதனை பின்பற்றி,  கொரோனா விடுமுறை காலத்தில் மாணவர்கள் திறம்பட பயிற்சி பெற்றனர் .இதன்தொடர்ச்சியாக தற்போது திருக்குறள் முற்றெளுதும் போட்டி நடைபெற்றது. திருக்குறளின் 1330 குறள்களையும் மனப்பாடம் செய்து பிழையின்றி தெளிவாக எழுதியவர்களுக்கு, இருமன்குளம் பள்ளியின் சார்பாக சான்றிதழ்கள் , திருக்குறள் புத்தகங்கள் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன.


இந்நிகழ்ச்சியில், பள்ளி தலைமையாசிரியர் லட்சுமி பிரபா, பட்டதாரி ஆசிரியர்கள் இளங்கோகண்ணன், வேல்முருகன், நாகராஜ் மற்றும் ஜெயலட்சுமி ஆகியோர் பங்கேற்று,  போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தினர். ஆசிரியர்களின் இந்த செயலை, பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். 

Tags:    

Similar News