சங்கரன்கோவில் அருகே எட்டரை லட்சம் மதிப்பிலான குட்கா பான்மசாலா பறிமுதல்
கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் 12 லட்சம் மதிப்பிலான பணம் 5 பேரை அதிரடியாக காவல் துறையினர் கைது செய்தனர்.;
சங்கரன்கோவில் அருகே எட்டரை லட்சம் மதிப்பிலான குட்கா பான்மசாலா பறிமுதல் .கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் 12 லட்சம் மதிப்பிலான பணம் 5 பேரை அதிரடியாக காவல் துறையினர் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே முள்ளிகுளம் பகுதியில் சேலத்தில் இருந்து லாரியில் தடை செய்யப்பட்ட குட்கா பான்மசாலா பொருட்கள் கடத்தி வருவதாக காவல்துறையினர்க்கு ரகசிய தகவல் கிடைத்தன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர். அப்போது லாரியில் இருந்து குட்கா பான் மசாலா பொருளை முள்ளிகுளம் செங்கான் என்பவருக்கு விநியோகம் செய்து கொண்டு இருந்த போது காவல் ஆய்வாளர் ராஜாராம் தலைமையிலான தனிப்படையினர் லாரியை மடக்கி பிடித்தனர்.
லாரி ஒட்டுநரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் சேலத்தில் இருந்து பொருட்களை ஏற்றி வருவதாகவும் தெரிவித்தனர் இதனையடுத்து அவர்களிடம் இருந்த எட்டரை லட்சம் மதிப்புள்ள குட்கா பான் மசாலா பொருட்களை பறிமுதல் செய்தனர். விநியோகம் செய்ய இருந்த முள்ளிகுளம் பகுதியை செங்கான்,சேர்ந்தமரம் குமார், கடையநல்லூர் துரை, சேலத்தை சேர்ந்த ஓட்டுநர் கோவிந்தராஜ் நடராஜ் உள்ளிட்ட 5 பேரையும் அவர்களிடம் இருந்த 12 லட்ச ரூபாய் பணம் வாகனம் உள்ளிட்ட 30 லட்ச மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்து புளியங்குடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.