உரம் பதுக்கல், அதிக விலைக்கு விற்பனை: சங்கரன்கோவிலில் விவசாயிகள் வேதனை

சங்கரன்கோவில் பகுதிகளில் யூரிய உரம் பதுக்கி விற்பனை செய்து வருவதால் விவசாயிகள் வேதனை. அதிகாரிகள் அலட்சியம்.

Update: 2021-11-19 09:45 GMT

சங்கரன்கோவில் பகுதிகளில் யூரிய உரம் பதுக்கி விற்பனை செய்து வருவதால் விவசாயிகள் வேதனை. அதிகாரிகள் அலட்சியம்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், திருவேங்கடம், குருவிகுளம், கரிவலம் ஆகிய பகுதிகளில் இந்தாண்டு போதிய அளவு வடகிழக்கு பருவமழை பெய்ததால் நெல், உளுந்து, மக்காசோளம் உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்களுக்கு தேவையான யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் யூரியா உரம் கடைகளில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக சங்கரன்கோவில், குருவிகுளம், மேலநீலிதநல்லூர் பகுதிகளில் உள்ள வேளாண்மைதுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் அலட்சியத்துடன் பதில் கூறுவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். எனவே தமிழக அரசு யூரிய உரத்தின் தட்டுபாட்டை போக்கி அலட்சியத்துடன் பதில் அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாகும்.

Tags:    

Similar News