சாலையில் வீணாக ஓடும் நீர் தான் குடிநீர்: வாகைகுளம் கிராமத்தின் அவலம்
சங்கரன்கோவில் அருகே சாலையில் வீணாக ஓடும் நீர் தான் எங்களுக்கான குடிநீர் என வேதனையுடன் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வாகைகுளம் கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு வாழும் பகுதி மக்களுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் முறையாக வழங்கததால் அப்பகுதி மக்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும், இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்கு மிகுந்த சிரமப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அப்பகுதி வழியாக செல்லும் குடிநீர் குழாய்கள் அவ்வப்போது ஏற்படும் உடைப்பின் போது வெளியேறும் நீரை கப்பின் மூலம் கோரி ஊற்றிக் துணியை வைத்து வடிகட்டி, குடிநீருக்காக எடுத்துச் செல்லும் அவலம் நிலவுகிறது. எனவே அதிகாரிகள் உடனடியாக இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.