பாஜக அரசை கண்டித்து சங்கரன்கோவிலில் திமுக இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம்
மக்கள் விரோத ,ஜனநாயக விரோத ,பாஜக அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் திமுக இளைஞர் அணி சார்பில் பாஜக அரசை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பழைய நகராட்சி எதிர்புறம் உள்ள சங்கர்நகர் பகுதியில் பாஜக அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், வங்கி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும். கேஸ் விலை உயர்வை கண்டித்தும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோசங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இளைஞரணி ராம் சரவணன், நெசவாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சங்கை சரவணன்,மாநில பேச்சாளர் சங்கை.மாரியப்பன், நெசவாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சோம. செல்வபாண்டியன், விவசாய தொழிலாளர் அணி நகர அமைப்பாளர் அஜய் மகேஷ் குமார், வர்த்தகர் அணி வாழைக்காய் துரைப்பாண்டியன், பொறியாளர் அணி சங்கை முத்துக்குமார், வார்டு செயலாளர்கள் தங்கவேலு, சதாசிவம், பால்பாண்டியன் சுப்பிரமணியன், பிரதிநிதி அந்திக்கடை சுப்பிரமணியன்,இளைஞர் அணி விஜயராஜ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.