சங்கரன்கோவிலில் திமுக சார்பாக மாபெரும் கிரிக்கெட் போட்டி
சங்கரன்கோவில் நகரில் திமுக முப்பெரும் விழாவை முன்னிட்டு நடைபெறும் கிரிக்கெட் போட்டியை மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பாக பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், தந்தை பெரியார் பிறந்த நாள், திராவிட முன்னேற்ற கழகம் துவக்க நாள் ஆகிய முப்பெரும் விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி இன்று துவங்கியது.
சங்கரன்கோவில் காந்தி நகர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியை தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். காந்திநகர் கிரிக்கெட் கிளப் சார்பில் நடைபெறும் மாபெரும் கிரிக்கெட் போட்டி ஐந்து நாட்கள் நடைபெறுகின்றன. இதில் ஏராளமான அணிகள் பங்கேற்கின்றன.