விதிமீறி அதிகம் கூட்டம்:அதிமுகவினர் 200க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு

சங்கரன்கோவில், கொரோனா விதிகளை மீறி அதிகம் கூட்டம் சேர்த்ததாக அதிமுகவினர் 200க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

Update: 2021-09-25 04:45 GMT

சங்கரன்கோவிலில்,  நேற்று நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில்,  கொரோனா விதிமீறல் மீறி அதிகம் கூட்டம் கூடியதாக புகார் எழுந்துள்ளது. 

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில்,  கொரோனா விதிமுறைகளை மீறி அதிகம் கூட்டம் சேர்த்ததாக , அதிமுகவை ச்  சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சங்கரன்கோவிலில் நேற்று தனியார் விடுதியில் வைத்து, அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், கொரோனா கட்டுபாடுகளை மீறி,  அதிகம் பேர் கூட்டமாகக் கூடியதாக புகார் எழுந்தது. இதையடுத்து சங்கரன்கோவில் அதிமுக நகர செயலாளர் ஆறுமுகம் உட்பட்ட, 200க்கும் மேற்பட்டவர்கள் மீது,  நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News