முன்விரோதம் காரணமாக கொலை முயற்சி: ஒருவர் கைது; மூவருக்கு வலைவீச்சு
சங்கரன்கோவிலில் முன்விரோதம் காரணமாக செல்லையா என்பவரை கொலை செய்ய முயன்ற கூலிப்படையை சேர்ந்த கோட்டைச்சாமி என்பவர் கைது.
சங்கரன்கோவிலில் ரேசன் அரிசி கடத்தலில் முன்விரோதம் காரணமாக செல்லையா(50) என்பரை கொலை செய்ய முயன்ற கூலிப்படையை சேர்ந்த கோட்டைச்சாமி என்பவர் கைது. மேலும் மூவருக்கு போலீசார் வலைவீச்சு.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ரேசன் அரிசி வியபாரம் செய்வதில் செல்லையா என்பவருக்கும், மூர்த்தி என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடாந்து மூர்த்தி என்பவர் ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபடும் போது செல்லையா என்பவர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து வந்துள்ளதாக கூறி மூர்த்தி என்பவர் செல்லையாவை கொலை செய்ய கூலிப்படையை சேர்ந்த கோட்டைச்சாமி, நவஸ்கான் ஆகியோருக்கு பணம் கொடுத்து கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
இதனைதொடர்ந்து இன்று சங்கரன்கோவிலில் உள்ள டீக்கடையில் செல்லையா டீ குடித்து கொண்டிருந்த போது மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் வந்து அவரை கொலை செய்ய முயன்ற போது அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டதால் கூலிப்படையை சேர்ந்த இருவர் தப்பியோடிய நிலையில் கோட்டைச்சாமி என்பவரை செல்லையா மற்றும் அவருடன் நின்றவர்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
விரைந்து வந்த டவுண் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் கோட்டைச்சாமி என்பவர் மீது பல்வேறு கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. இவர் கூலிப்படையை சேர்ந்தவர் மூர்த்தி என்பவர் பணம் கொடுத்து செல்லையாவை கொலை செய்ய சொன்னதாக கோட்டைச்சாமி கூறியதை தொடர்ந்து தப்பியோடிய கூலிப்படையை சேர்ந்த நவஸ்கான் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.