சங்கரன்கோவில் பகுதிகளில் ஒருவருக்கு ஒரு மூட்டை யூரியா: விவசாயிகள் வேதனை
சங்கரன்கோவிலில் பகுதிகளில் யூரிய உரம் தட்டுப்பாட்டால் ஒரு விவசாயிக்கு ஒரு மூடை உரம் மட்டும் விற்பனை. விவசாயிகள் வேதனை.
சங்கரன்கோவிலில் பகுதிகளில் யூரிய உரம் தட்டுப்பாட்டால் ஒரு விவசாயிக்கு ஒரு மூடை உரம் மட்டும் விற்பனை செய்வதால் விவசாயிகள் வேதனை.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதிகளில் கடந்த ஒரு மாத்திற்கும் மேலாக யூரியா உரம் அதிகளவில் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இது சம்பந்தமா விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் விவசாயிகள் அனைவரும் பயிரடப்பட்டுள்ள நெல், சோளம், உளுந்து உள்ளிட்ட பயிர்களுக்கு உரம் கிடைக்காததால் மிகுந்த வேதனை அடைந்தனர்.
இன்று சங்கரன்கோவில் தனியாருக்கு சொந்தமான உரக்கடையில் யூரியா விற்பனை செய்யப்படுவதாக தகவலறிந்த இருநூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உரக்கடையின் மூன்பு நீண்ட வரிசையில் நின்றனர். யூரியா உரமானது குறைந்த அளவே வந்திருப்பதால் ஒரு விவசாயின் ஆதாருக்கு ஒரு மூடை யூரிய உரம் மட்டும் வழங்கப்பட்டு வருவதால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
எனவே சங்கரன்கோவில் பகுதிகளில் உர தட்டுப்பாட்டை போக்க மாவட்ட ஆட்சியர் மெத்தனமாக செயல்படாமல் உடனடியாக நடவடிக்கை எடுத்து உர தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாகும்.