மான்கொம்பை பதுக்கியவர் கைது: சிவகிரி வனத்துறையினர் நடவடிக்கை
வனத்துறையினர் வனஉயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இருபத்தையிந்தாயிரம் ரூபாய் அபாரதம் விதித்து சிவகிரி வனத்துறையினர் நடவடிக்கை.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சிவகிரியை சேர்ந்த வெண்ணி என்பவரது வீட்டில் மான் கொம்பு பதுக்கி வைத்திருப்பதாக சிவகிரி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற வனச்சரகர் சுரேஷ் தலைமையிலான வனத்துறையினர் வீட்டில் மறைத்து வைத்திருந்த மான் கொம்பை பறிமுதல் செய்து வெண்ணி என்பவரை கைது செய்தனர்.
வனத்துறையினர் வனஉயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இருபத்தையிந்தாயிரம் ரூபாய் அபாரதம் விதித்து சிவகிரி வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். கடந்த ஒரு வருடங்களில் மட்டும் சிவகிரி, தேவிபட்டிணம் பகுதிகளில் வனக்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது ஒரு கோடி ரூபாய் வரை அபாராதம் விதித்து சிவகிரி வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வந்துள்ளது குறிப்பிடதக்கது.