தென்காசி மாவட்டம் -கொரோனா தடுப்பூசி குறித்து வில்லிசை மூலம் விழிப்புணர்வு
சங்கரன்கோவிலில் கொரோனா தடுப்பூசி வில்லிசை பாடல் மூலம் விழிப்புணர்வு;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு அழகுநாச்சியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாரியம்மாள். இவர் வில்லிசை குழு ஒன்றை நடத்தி வருகிறார். அந்த குழு மூலம் சமூகம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் பல பாடல்கள் பாடியுள்ளார்.
தற்போது கொரோனா தடுப்பூசி போடுவதின் அவசியம் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம், போடுங்க, போடுங்க, தடுப்பூசி போடுங்க, என்னும் வில்லிசை பாடலை பாடி சமூகவலைதளங்களில் ஏற்றியுள்ளார்.தற்போது அது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் இந்த பாடலில் தமிழக அரசு விடுத்துள்ள பல்வேறு கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை வரிகளாக கொண்டு பாடல் அமைந்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது .
#tenkasi #awareness #vaccine #traditional #lockdown #instanews #corona #covid #coronavirus #covid_19 #tamilnadu #covidvacccine #staysafe #virus #stayathome #socialdistancing #tamilnadu #government