சங்கரன்கோவிலில் மது போதையில் வீடு புகுந்து செல்போன் திருடிய வாலிபருக்கு பொது மக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ராமசாமியாபுரம் 3 வது தெருவில் வசித்து வருபவர் சுப்பையா. இவர் ஒர்க்ஷாப்பில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். நேற்று இரவு பணி முடித்து வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது திடீரென தனது வீட்டில் இருந்து ஒருவர் வெளியே வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவரது மனைவி வீட்டை விட்டு வெளியே ஓடிவந்து வீட்டில் செல்போன் திருடி செல்வதாகவும் கூறி கூச்சலிட்டார் .
உடனே அவரது கணவர் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவனை துரத்தி சென்று பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் மது போதை அசாமி ஏழாயிரம்பண்ணையை சேர்ந்த முருகன் மகன் பாண்டி என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.