காற்றில் பறக்கவிடப்படும் கொரோனா விதிமுறைகள், கவனிப்பாரா, கலெக்டர்
தென்காசி மாவட்டத்தில் கொரோனா விதி மீறல்கள் அதிகமாக உள்ளது, கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை பேருந்து நிலையத்தில் பள்ளிகளில் பயிலும் 9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையுள்ள மாணவ,மாணவிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ,மாணவிகள் காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு நகரப் பேருந்துகளில் பயணம் செய்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் செல்கின்றனர்.
ஆனால் போதிய பேருந்து வசதி இல்லாததால் அரசு பேரூந்துக்கள் கொரோனா தொற்றை மறந்து விதிகளுக்கு முரணாக அதிகமான கூட்டங்களை ஏற்றி கடையநல்லூர்,வடகரை,பண்பொழி ,தெற்குமேடு,இலஞ்சி புளியரை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றது.
தமிழக கேரளா எல்லைப்பகுதியாக செங்கோட்டை அமைந்துள்ளதால் கொரோனா அதிகமாக தொற்று பரவ வாய்ப்புள்ள காரணத்தால் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும்,போக்குவரத்து துறை,சுகாதாரத் துறையும் நகராட்சி நிர்வாகத்திற்கும் அறிவுறுத்தவேண்டுமென சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.