கோழிப்பண்ணையில் திருடிய 2 நபர்கள் கைது

கடையநல்லூரில் கோழிப்பண்ணையில் திருடிய 2 நபர்கள் கைது

Update: 2021-04-30 02:22 GMT

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலக்கடையநல்லூரில் முகைதீன் (80) என்பவர் கோழிப்பண்ணை வைத்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் அவரது கோழிப் பண்ணையில் இருந்த மூன்று மூடை கோழி தீவனங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து அவர் கடையநல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் அவர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு கோழி தீவனத்தை திருடிய அதே பண்ணையில் வேலை பார்க்கும் ராமகிருஷ்ணன் என்பவரின் மகன் மாரியப்பன்(42) மற்றும் முருகையா என்பவரின் மகன் வேலுசாமி (44) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தார்.

Tags:    

Similar News