தென்காசி மாவட்டம் - குண்டாறு அணை நிரம்பியது-விவசாயிகள் மகிழ்ச்சி.
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் குண்டாறு அணை நிரம்பியது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் உருவாகியதால் கடையநல்லுரில் அமைந்துள்ள குண்டாறு அணை தன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான குண்டாறு அணைக்கு காட்டாற்று வெள்ளம் வனப்பகுதியிலிருந்து 110 கன அடி நீர் வந்து கொண்டிருக்கின்றது.இதன் காரணமாக அணை தனது முழு கொள்ளளவான 36.10 அடியை எட்டியுள்ளது.
அணையிலிருந்து 110 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது . குண்டாறு ஆற்றுப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 36.10 அடி
நீர் வரத்து: 31 கன அடி
வெளியேற்றம்: 31 கன அடி