செங்கோட்டை நூலகத்தில் இலவச நீட் மாதிரி தேர்வு:மருத்துவ மாணவர்களுக்கு அழைப்பு
செங்கோட்டை நூலகத்தில் நீட் மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் அனுமதி இலவசம்.
மருத்துவ படிப்பு மாணவர்களுக்கான நீட் தேர்வுக்கு செல்ல தங்களை தயார்படுத்திக்கொள்ள நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக ஒரு மாதிரி தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இலவச மாதிரி தேர்வு வருகிற 11.09.21சனிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறும்
அனைவருக்கும் கேள்வித்தாள் மற்றும் விடைதாள் கொடுக்கப்படும். தேர்வுக்கு பின் உடனடியாக திருத்தி அதிக மதிப்பெண் பெற்ற மூன்று நபர்களுக்கு பரிசும் வழங்கப்படும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம். முன்பதிவு தேவையில்லை. மேலும் விவரங்களுக்கு நூலகர் ராமசாமி தொலைபேசி எண்9486984369.