2 குழந்தைகளை கொன்ற தாய் கள்ளக்காதலனுடன் கைது..!
பெற்ற தாயே 2 குழந்தைகளை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இரண்டு குழந்தைகளை கொலை செய்த தாய் கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள நொச்சி குளத்தை சேர்ந்த முத்துமாரி கணவரைப் பிரிந்து மகள் மற்றும் மகனுடன் வசித்து வந்தார்.
இவருக்கும் அருகிலுள்ள வல்லராமபுரத்தைச் சேர்ந்த சசிகுமார் இருவருக்கும் தகாத உறவு இருந்த நிலையில், முத்துமாரிக்கு 2018ம் ஆண்டு குழந்தை பிறந்துள்ளது. பிறந்து ஐந்து நாட்கள் ஆன நிலையில் அப்பகுதியில் உள்ள குளத்தில் வீசி சென்றுள்ளனர். இதுகுறித்து கிராம அலுவலர் சேர்ந்தமரம் காவல்துறையில் புகார் அளித்ததை தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த முத்துமாரி மற்றும் சசிகுமார் கைது செய்யப்பட்டனர்.
அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் 2018 மற்றும் 2019 ஆகிய வருடங்களில் பிறந்த இரு குழந்தைகளையும் பிறந்த ஒரு சில நாட்களில் கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து 2019ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட குழந்தையின் சடலத்தை அவர்கள் அடையாளம் காட்டிய இடத்தில் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்து வருகின்றனர். பிறந்து ஒரு சில நாட்களில் குழந்தைகளை கொன்று புதைத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.