தென்காசி அருகே ரூ 1.44 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

தென்காசி மாவட்டம சுரண்டை பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ரூ 1.44 லட்சம் மதிப்புள்ள குட்கா போலீசாரிடம் சிக்கியது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2021-04-18 07:15 GMT

சுரண்டை பகுதியில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி ஆலோசனையின் படி எஸ்ஐ ஜெயராஜ் மற்றும் போலீசார் சுரண்டை அண்ணா சிலை, சங்கரன்கோவில் ரோடு, திருநெல்வேலி ரோடு ஆகிய பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது சேர்ந்தமரத்தில் இருந்து சுரண்டை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த காரை மறித்து சோதனையிட்டனர். அப்போது காரில் ரூபாய் 1.44 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் விற்பனைக்காக கடத்தி சென்றது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து குட்கா பொருட்களை கடத்திய செங்கோட்டை எஸ்.ஆர்.கே தெருவைச் சேர்ந்த இசக்கி ராஜ் (28), மணிகண்டன்(31), ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

தொடர்ந்து குட்கா பொருட்களையும், கடத்திய காரையும் பறிமுதல் செய்துள்ளனர். சுரண்டை பகுதிகளில் குட்கா பொருட்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News