கடையநல்லூரில் கிடாய் சண்டை போட்டி; 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு
கடையநல்லூர் பகுதியில் கிடாய் சண்டை போட்டி நடத்திய 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் மேற்குமலாம்பேட்டை கூடுகாடு பகுதியில் கிடாய் சண்டைப் போட்டி நடப்பதாக கடையநல்லூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் அங்கு சென்ற காவல்துறையினர், கிடாய் சண்டைப் போட்டியில் ஈடுபட்ட சையது இப்ராகிம் மகன் அப்துல் காதர் (18), சையது இப்ராகிம் மகன் பீர் முகமது தாபித் (26), அப்துல் கக்கீம் மகன் சதாம் உசேன் (28), ஷாகீர் உசேன் மகன் ஷேக் முகமது அலி (27), அசன்முகமது மகன் ரிஸிகான் (21), காஜாமைதீன் மகன் முகமது அஸ்கர் (21), ஆகிய ஆறு பேர் மற்றும் இரண்டு செம்மறி ஆட்டு கிடாய்களையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரனையில் இவர்கள் ஆறு பேரும் இரண்டு கிடாய்களை வைத்து சண்டை போட்டியில் ஈடுபட்டதால் விலங்குகளை துன்புறுத்திய குற்றத்திற்காக இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கடையநல்லூர் பகுதியில் தொடர்ந்து இது போன்ற கிடாய் சண்டை போட்டி திருட்டு தனமாக நடைபெற்று வருகிறது. ஆனால் காவல்துறையினர் இவர்கள் மீது பெயரளவிலேயே நடவடிக்கை எடுத்துவிட்டு இவர்களை அனுப்பி வைக்கின்றனர்.
இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் தொடர்ந்து திருட்டுதனமாக கிடாய்கள் சண்டைகள் போட்டிகள் நடத்த காரணமாக உள்ளது.