கடமான் (மிளா ) இறைச்சி வைத்திருந்தவர்களுக்கு அபராதம்

கடையநல்லூர் அருகே கடமான் (மிளா ) இறைச்சி வைத்திருந்த நான்கு நபர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது

Update: 2022-10-05 08:16 GMT

கடமான் இறைச்சி வைத்திருந்ததாக அபராதம் விதிக்கப்பட்டவர்கள்

மேற்குத் தொடர்ச்சி மலையை மத்திய அரசு பல்லுயிரினச் சரணாலயமாக  அறிவித்துள்ளது. இங்கு ஏளமான மூலிகைகள், புலி, சிறுத்தை, யானை, கடாமான் (மிளா ) மான், காட்டுப் பன்றிகள்,  போன்ற விலங்குகளும், பல்வேறு இன பறவைகளும் உள்ளன.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது. இப் பகுதியில் அடிக்கடி வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் புகுந்து விடுவது வாடிக்கையாகி வருகிறது. இதேபோல் பொதுமக்கள் காட்டுக்குள் சென்று விலங்குகளை வேட்டையாடும் நிகழ்வும் நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் கடமான்கள் அதிகம் உள்ளன. இவை காட்டு மரங்களின் இலைகள், பட்டை, புல் பூண்டு மற்றும் சில காய்களையும் உண்கிறது. கடமான்கள் பெரும்பாலும் மரங்கள் நெருங்கி வளர்ந்திருக்கும் பகுதிகளில் வாழும். 

இந்நிலையில் நெல்லை வன உயிரினச் சரணாலயம், திருநெல்வேலி வன கோட்டம், மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிர் காப்பாளர் முருகன் உத்தரவுப்படி கடையநல்லூர் வன சரக்கத்திற்கு உட்பட்ட எருமை சாடி மற்றும் மேக்கரை பகுதிகளில் வனச்சரக அலுவலர் சுரேஷ், மேக்கரை பீட் வனக்காப்பாளர் அம்பலவாணன், முருகேசன், வெள்ளக்கல் தேறி பீட் வனக்காப்பாளர் ராஜா, பண்பொழி பிட் வனக்காப்பாளர் முத்துச்சாமி, வேட்டை தடுப்பு காவலர் ஆறுமுகம், ஆகியோர் அடங்கிய வனத்துறையினர் எருமைசாடி மற்றும் மேக்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது, அவர்கள் திருமலாபுரம் பகுதியை சார்ந்த செல்லையா மகன் காசிராஜன், மேக்கரை பகுதியை சார்ந்த செல்லையா மகன் ஆறுமுகம், மேக்கரை பகுதியைச் சார்ந்த செல்லையா மகன் இசக்கிமுத்து, மேக்கரை பகுதியைச் சார்ந்த செல்லையா மகன் ஐயப்பன் என்பது தெரியவந்தது.

மேலும் அவர்களை சோதனை செய்ததில் எருமை சாடி பகுதியில் செந்நாய் கடித்து இறந்த கடாமான் (மிளா )வின் இறைச்சி வைத்திருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் நான்கு பேருக்கும் தலா ரூ.25,000 என ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

தொடர்ந்து பாதுகாக்கப்பட்ட வன பகுதியில் அத்துமீறி நுழைந்து வன விலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடமான் போன்ற விலங்குகளின் எண்ணிக்கையே  புலி, செந்நாய் போன்ற அரிய விலங்குகளின் இருப்பை உறுதி செய்கின்றது. காடுகளில் கால்நடை மேய்த்தல், வேட்டையாடுதல் போன்ற பல்வேறு செயல்கள் கடமான்களின் வாழ்க்கையைப் பெரிதும் அச்சுறுத்துகின்றன. மேலும் கடமான்களின் வாழ்விடம் இல்லாததால் அவை தங்கள் அருகில் இருக்கும் விளை நிலங்களுக்கு உணவுக்காக வருவதால் விவசாயிகளும் கடமான்களைக் கொல்கின்றனர்

கடமான் (மிளா) இறைச்சி வைத்திருந்த நான்கு நபர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் அபதாரம். வனத்துறையினர் அதிரடி. வனவிலங்குகளை வேட்டையாடினால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் வனத்துறை அறிவிப்பு. வெளியிட்டுள்ளது

Tags:    

Similar News