தனியார் அருவிகளில் அலைமோதும் கூட்டம்; போராடும் அதிகாரிகள்

குற்றாலம் அருகே தனியார் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருவதால், அவர்களை விரட்ட அதிகாரிகள் போராடி வருகின்றனர்.

Update: 2021-07-17 11:13 GMT

தனியார் அருவிகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை விரட்ட  காத்திருக்கும் அதிகாரிகள்.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்கள் பருவ காலங்கள் ஆகும். இந்த காலகட்டத்தில் குற்றாலத்தில் உள்ள பேரருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இதமான சாரல் மழையும்,மெல்லிய காற்றுடன் ஏற்படும் குளுமை எங்கேயும் கிடைக்காது. இதனை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

இந்நிலையில்,  கொரோனா பரவல் காரணமாக அனைத்து சுற்றுலா தளங்களுக்கு கடந்த 2 வருடங்களாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி தனியார் நீர் வீழ்ச்சிக்கு செல்கின்றனர். செங்கோட்டை மற்றும் மேக்கரையில் உள்ள அருவிகளில் பணம் செலுத்தி குளித்து மகிழ்கின்றனர். இது தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது.

இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் குன்டாறு அணைப்பகுதியில் வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனத்தை செங்கோட்டை வட்டாட்சியர் ரோஷன் பேகம் எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பி வருகிறார். ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறு என்றாலே தனியார் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வருவதும், அவர்களை அரசு அதிகாரிகள் விரட்டுவதும் வாடிக்கையாகி வருகிறது.

Tags:    

Similar News