செங்கோட்டையில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி
தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் கொரோனா தொற்று நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.;
தமிழகத்தில், கொரோனா 2வது அலை வேகமாய் பரவி வருகிறது. இந்த நிலையில், தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி துறை, வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை இணைந்து செங்கோட்டை நகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கினர்.
இந்த நிகழ்ச்சிக்கு, உதவி திட்ட அலுவலரும் தென்காசி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான சங்கரநாராயணன் தலைமை வகித்தார். செங்கோட்டை தாசில்தார் ரோசன் பேகம் செங்கோட்டை நகராட்சி ஆணையாளர் நித்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாஸ்க் அணிவதன் அவசியம், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகளை சானிடைசர் அல்லது சோப்பு போட்டு கழுவுதல், ஆரோக்கியமான உணவினை உண்ண வேண்டியதன் அவசியம் உள்ளிட்ட விழிப்புணர்வுகள், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் துணை வட்டாட்சியர் சுடலை மணி, வருவாய் ஆய்வாளர் ஜாஸ்மின், செங்கோட்டை ஊராட்சி ஒன்றிய பணி மேற்பார்வையாளர் செல்வம், நகராட்சி சுகாதார ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் நகராட்சி, வருவாய்துறை, ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் பேருந்துகள், ஆட்டோ போன்ற வாகனங்களிலும், கடைகளிலும் அரசு கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்றும் ஆய்வு செய்யப்பட்டது.