விவசாயம் குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு
விவசாயம் குறித்து, கொட்டாகுளம் கிராம இளைஞர்களுக்கு, வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.;
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட எஸ். தங்கப்பழம் வேளாண்மை கல்லூரியைச் சார்ந்த நான்காம் ஆண்டு மாணவிகள் ராஜாத்தி, ரங்கீலா, சபிதா மற்றும் சுபஸ்ரீ ஆகியோர், தென்காசி மாவட்டம், கொட்டாகுளம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு குழுவுடன் கலந்தாய்வு நடத்தினர்.
இக்குழுக்கலந்தாய்வில், விவசாயத்தின் முக்கியத்துவம், விவசாயத்தில் இளைஞர்களின் பங்களிப்பு, வேளாண்மை சார்ந்த தொழில்களில் இளைஞர்களின் பார்வை முதலியவை குறித்து கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில், கொட்டாகுளம் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை கூறினர்.