வயல்வெளிகளில் சாய்ந்து கிடக்கும் மின்கம்பங்கள்-மின் வாரிய ஊழியர்கள் அலட்சியம்
சாம்பவர்வடகரை பகுதியில் சாய்ந்து கிடக்கும் மின்கம்பங்களால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.;
வயல்வெளிகளில் சாய்ந்து கிடக்கும் மின்கம்பங்கள்
தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை பகுதியில் இரட்டைகுளம் பாசன வயல்வெளிகள் உள்ளது. இந்த பகுதியில் உயர் அழுத்த மின்சாரம் செல்லும் மின்பாதை அமைக்கப்பட்டிருந்தது. இதில் தற்போது மின்சப்ளை இல்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் கடந்த சில மாதத்திற்கு முன்பாக பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது.
அப்போது 3 மின்கம்பங்கள் முழுவதும் சாய்ந்து வயர்கள் வயல்வெளிகளில் கீழே கிடக்கின்றன. இதனால் விவசாய பணிகள் உட்பட எந்த பணிகளும் செய்ய முடியவில்லை. மேலும் நடந்து செல்லும் விவசாயிகள் தரையில் கிடக்கும் வயர்களில் கால் தட்டி கீழே விழுந்து காயத்துடன் செல்கின்றனர்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுவரை மின்கம்பங்களை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது மிளகாய், சோளம், உள்ளி, பல்லாரி, கத்தரிக்காய், தக்காளி, வெண்டை, பருத்தி போன்ற பயிர்களை பயிரிட முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.
ஆகவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் கம்பங்களையும், வயர்களையும் அகற்றி விவசாயிகளுக்கு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கவனத்தில் கொள்வார்களா அதிகாரிகள்? காத்திருக்கும் விவசாயிகள்...