தொகுதி பிரச்சனைக்கு குடும்ப பிரச்சனை போல் தீர்வு-அதிமுக வேட்பாளர்

Update: 2021-03-19 10:00 GMT

தொகுதி பிரச்சனையை எனது குடும்ப பிரச்சனையாக கருதி தீர்வு காண்பேன் என்று கூறி கடையநல்லூர் அதிமுக வேட்பாளர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியனின் மகன் கிருஷ்ணமுரளி போட்டியிடுகிறார். இவர் செங்கோட்டை அருகில் உள்ள புளியரை அருள்மிகு தெட்சிணாமூர்த்தி ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்த பின்பு அவர் புளியரை, தெற்குமேடு, அங்கண் காலடி, பகவதிபுரம், கோட்டைவாசல், பூலாங்குடியிருப்பு , கீழப்புதூர், கேசவபுரம் , உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும் அவர் பேசும் போது, கடையநல்லூர் தொகுதியில் உள்ள பிரச்சனைகளை தனது குடும்ப பிரச்சனையாக கருதி தீர்வு காண்பேன் என்று கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தின் போது பாமக மாநில துணை தலைவர் அய்யம்பெருமாள் பிள்ளை, மாநில துணை பொதுச் செயலாளர் திருமலைக்குமாரசாமி யாதவ், மாவட்ட தலைவர் சீதாராமன் உள்ளிட்ட பா.ம.க, த.மா.கா, பா.ஜ.க நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News