மேலநீலிதநல்லூர் ஒன்றிய சேர்மன் பதவியை திமுக பிடித்தது
தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் ஒன்றிய சேர்மன் பதவியை திமுக பிடித்தது;
தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் 12 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவி உள்ளது இதில் திமுக எட்டு இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஒன்றியக்குழு தலைவர் பதவியை பிடித்தது.நான்கு பேர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
1வது வார்டில் சுந்தரி, இரண்டாவது வார்டில் முருகன், 3வது வார்டில் முத்துமாரி, 5 வது வார்டில் அருள் சீலி, 6வது வார்டில் வேல்மயில், 7வது வார்டில் பாரதிகண்ணன், 9வது வார்டில் மாதவி, 10வது வார்டு அமுதா, 12 வது வார்டில் பிரேமா ஆகியோர் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். நாலாவது வார்டில் கணேசன், 8வது வார்டில் ராமலட்சுமி, பத்தாவது வாரத்தில் அமுதா 11வது வார்டு சுஜிதா ஆகியோர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளனர்.