தென்காசி மாவட்டம் - இதனையும் ஆய்வு செய்வாரா? சுகாதாரத்துறை அமைச்சர்.
தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனை சுகாதர சீர்கேடு - ஆய்வு மேற்கொள்ள வரும் அமைச்சருக்கு பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் வே்ணடுகோள் விடுத்துள்ளனர்.;
இதனை ஆய்வு செய்வாரா? சுகாதாரதுறை அமைச்சர்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருக்கு பாமரனின் வேண்டுகோள் பெரிய ஆபிஸர் ஐயா( அமைச்சர்) தென்காசி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைக்கு உங்க அரசாங்கம் சொன்னது படி கொரோனா செக் அப்புக்கு போனேன். வாசல்ல தீ வாளிகள் அழகைப்பார்த்து மெய் மறந்து போனேன்...உங்களுக்கு தெரியுமோ? தெரியாதோ, அதனலாதான் உங்களுக்கு இத எடுத்து சொல்றேன். தப்புன்னா சபை மன்னிக்கனும்.
அதாவது கொரொனா காலத்துல மாஸ்க் போடலன்னா 200 பொதுஇடத்துல துப்புனா 500, கடைகள்ல 5 சமூக இடைவெளி விடலண்ணா 5000 அப்படின்னு பைன் போடுறீங்க..அரசு மருத்துமனையில் உள்ள சுகாராத கேடுகளுக்கு என்னன சொல்ல போறீங்க..நல்லது நடக்கும் அப்படின்னு மக்கள் நம்புறது கோவிலுக்கு அடுத்து மருத்துவமனை அடுத்து நீதிமன்றம்..இப்போ மக்கள் மருத்துவமனைக்கு படையெடுத்து வாரங்க நல்லது நடக்கும் அப்படின்னு..வரவேற்கும் வாசலில் இப்படி சுகாதார சீர்கேடு இருக்கு சார்...
இத இப்ப எதுக்கு சொல்றேன்னா? நீங்க இன்னிக்கு ( 26 ம் தேதி) ஆய்வு பண்ண போறதா சொன்னாங்க அதனாலதான்..
உங்களுக்கு புரியும் படி விளக்கமாக சொல்கிறேன் சுகாதாரத்துறை அமைச்சர் ஐயா...கெ
மாவட்டத்தின் தலைமை அரசு மருத்துவமனையாக தென்காசியில் உள்ள அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருக்கும் போது தென்காசியில் உள்ள அரசு மருத்துவமனை தலைமை மருத்துவமனையாக இருந்துள்ளது.
தற்போது தனி மாவட்டமாக பிரிக்கப்பட்ட பின்னர் தென்காசி மாவட்டத்தின் தலைமை அரசு மருத்துவமனையாக தற்போது இது செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த மருத்துவமனையில் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் எதுவும் இல்லை.தென்காசி மாவட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஒரு நாளைக்கு சராசரியாக 1000 பேர் வெளிப்புற நோயாளியாகவும், சுமார் 300 முதல் 500 பேர் வரை உள் புறநோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆனால் தற்போது அதே மருத்துவமனையில் 250 முதல் 290 வரையிலான நோயாளிகள் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ள நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே மருத்துவமனையில் தீ தடுப்பு உபகரணங்கள் சரியான முறையில் செயல்படவில்லை என பொதுவான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில் விழுப்புரம் அருகே அரசு மருத்துவமனையில் 108 வாகனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு உபகரணங்கள் சரியான முறையில் இருந்ததால் பெரும் தீவிபத்து தவிர்க்கப்பட்டது.அனைவரும் அறிந்தது தான்.
அது போன்ற அசம்பாவித சம்பவம் தென்காசியில் மருத்துமனையில் நடைபெற்று விடக்கூடாது என்பதுபொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு. தென்காசி அரசு மருத்துவமனையில் கண்காணிப்பாளர் மற்றும் இயக்குனர் அலுவலகத்திற்கு எதிரே உள்ள தீயணைப்பு வாளியில் எவ்வித எந்த ஒரு உபகரணமும் இல்லை. அந்த வாளியில் மண் அல்லது தண்ணீர் வைக்க வேண்டும் ஆனால் அது வெறுமையாக காட்சி அளிக்கிறது. அதற்குப் பதிலாக அந்த வாளியில் போதை வஸ்துக்களின் கழிவுகளும், குப்பைகளின் கழிவுகள் மட்டுமே உள்ளன.
இந்த சூழ்நிலையில் இன்று சுகாதார துறை அமைச்சர் தென்காசி மாவட்டத்தில் கொரோனாநோய் தடுப்பு பணிகள் தொடர்பான ஆய்வு பணிகளை மேற்கொள்ள உள்ளார். இதே மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சராசரியாக தினமும் 20க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் இல்லை. இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டால் உரிய பதில் கிடைக்கவில்லை. தென்காசி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு ஆய்வுகளை மேற்கொள்ளும் அமைச்சர் இந்த மாவட்டத்தில் இதுவரை ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தெளிவாக கூற வேண்டும்.
மேலும் மருத்துவமனையை சரியான முறையில் ஆய்வு செய்து தீ விபத்து ஏற்பட்டால் அதைத் தடுக்க என்ன முன்னேற்பாட்டு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பு.