யானையின் தந்தம் விற்க முயன்ற இருவர் கைது

கடையம் வனப்பகுதியில் இறந்த யானையின் தந்தத்தை விற்க முயன்றதாக இருவர் கைது

Update: 2021-05-07 05:16 GMT

கடையத்தில், தந்தம் விற்க முயன்றதாக கைது செய்யப்பட்டவர்கள்

தென்காசி மாவட்டம்  கடையம் வனப்பகுதியில் இறந்து கிடந்த யானையின் தந்தத்தை திருடி விற்க முயன்றதாக இருவரை வனத்துறையினர் கைது செய்து தந்தத்தைப் பறிமுதல் செய்தனர்.

கடையம், அருகே அழகப்பபுரத்தில் இருவர் யானை தந்தம் விற்க முயல்வதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட வன அலுவலர் கௌதம் உத்தரவின் பேரில் வனச்சரகர் (பொ) பரத் தலைமையில் வனத்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்போது அழகப்பபுரத்தைச் சேர்ந்த கல்யாணி மகன் கணேசன் (46), சுடலையாண்டி மகன் இன்பராஜ் (30) ஆகியோர் யானை தந்தம் வைத்திருந்ததும் அதை விற்க முயன்றதும் தெரியவந்தது.

மேலும் அவர்களிடம் விசாரித்ததில் கடையம் வனச்சரகம், கோரக்கநாதர் பீட் பகுதியில் இறந்து கிடந்த யானை தந்தத்தை திருடி வந்து விற்க முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து யானை தந்தம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News