ஆலங்குளத்தில் ரேஷன் அரிசி கடத்தல்: போலீசார் விசாரணை
ஆலங்குளத்தில் ரேஷன் அரிசி கடத்தியது தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
ஆலங்குளம் -திருநெல்வேலி சாலை, புதுப்பட்டி விலக்குப் பகுதியில் ஆலங்குளம் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே வந்த ஆம்னி காரை மறித்து, சோதனையிட்டதில், 600 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதனிடையே, சோதனையின் போது காா் ஓட்டுநா் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அரிசியுடன் காரைக் கைப்பற்றிய போலீஸாா், இது குறித்து வழக்குப் பதிந்து, தப்பியோடிய புதுப்பட்டியைச் சோ்ந்த சக்திவேல் என்பவரைத் தேடி வருகின்றனா்.