கடையம் அருகே ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
தென்காசி மாவட்டம், கடையம் அருகே ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.;
நெல்லை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள வெங்கடாம்பட்டி பகுதியில் வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு லாரியில் 30 முட்டைகளில் சுமார் 1050 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக லாரி டிரைவர் சிவகுமாரை போலீசார் கைது செய்தனர். மேலும், இதுதொடர்பாக, வேலன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.