பெண்ணை கல்லால் அடித்து கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

பெண்ணை கல்லால் அடித்து கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்து சிறையில் அடைப்பு.

Update: 2021-09-20 01:30 GMT

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுபட்டியில் வசித்து வரும் நபர் அதே பகுதியைச் சேர்ந்த சிவசுப்ரமணியன் என்பவரின் சகோதரியிடம் கடனாக ரூபாய் 30,000 வாங்கியுள்ளார். இந்நிலையில் வாங்கிய கடனை திரும்ப கொடுக்காததால் அவரின் வீட்டுக்கு சென்ற சிவசுப்பிரமணியன் அங்கிருந்த அவரின் மனைவியை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து ஆலங்குளம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பெயரில் சார்பு ஆய்வாளர் திரு. தினேஷ் பாபு அவர்கள் விசாரணை மேற்கொண்டு மேற்படி புதுப்பட்டி அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன்(54) மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தார்.

Tags:    

Similar News