கனமழையால் கடையம் அருகே வீடு இடிந்து விழுந்து சேதம்
கனமழையால் கடையம் அருகே வீடு இடிந்து விழுந்து சேதம்;
தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் சேர்வைகாரன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட, புறங்காட்டா புலியூர் கிராமத்தில் உள்ளவர் வீரன் (50). இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவரது வீடு, கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக, பாதிக்கப்பட்டது. மழை நீடித்த நிலையில், வீடு இடிந்து விழுந்துள்ளது.
எனினும், யாருக்கும் இதில் பாதிப்பில்லை. தற்போது, மழையில் ஒதுங்க இடமின்றி இருப்பதாகவும், இதனால் கடும் அவதி ஏற்பட்டுள்ளதாகவும் கவலையோடு தெரிவித்த விவசாயி வீரன், அரசாங்கம் நிவாரண உதவி, மாற்று வீடு உள்ளிட்ட தகுந்த நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என்று, கோரிக்கை விடுத்துள்ளார்.