ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார், அதிரடியாக சோதனை நடத்தினர்.

Update: 2021-11-30 00:45 GMT

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்சஒழிப்பு துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், திடீர் சோதனை நடத்தினர். 

தென்காசிமாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்,  ஆலங்குளம், தென்காசி, செங்கோட்டை, கீழப்பாவூர், கடையம் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் உட்பட்ட சில பஞ்சாயத்துக்கான தணிக்கை நடைபெற்றது. உள்ளாட்சி தணிக்கைகுழு உதவி இயக்குநர் முகம்மது லெப்பை, தென்காசி தணிக்கைக்குழு உதவி இயக்குனர் உமாசங்கர் தலைமையில் அலுவலர்கள் தணிக்கை பணி மேற்கொண்டனர்,

இந்நிலையில், நேற்று மாலை 6 மணியளவில், நெல்லை மாவட்ட லஞ்சஒழிப்பு துறை டிஎஸ்பி மெர்கலின் எஸ்கால், இன்ஸ்பெக்டர் அனிதா ராபின் ஞானசிங் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர்,  ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கணக்கில் வராத பணம் ரூபாய் 88 ஆயிரத்து 600 பறிமுதல் செய்யப்பட்டது. ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News