வெள்ளரியில் மகசூல் அதிகரிக்கும் முறையை விளக்கிய வேளாண் கல்லூரி மாணவிகள்

வெள்ளரியில் மகசூல் அதிகரிக்கும் முறை பற்றி வேளாண் கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம் அளித்தனர்.

Update: 2022-03-17 02:57 GMT

வெள்ளரி சாகுபடியில் மகசூல் அதிகரிப்பு பற்றி வேளாண் கல்லூரி மாணவிகள் செயல்விளக்கம் அளித்தனர்.

தென்காசி மாவட்டம், கடையம் வட்டாரம், மேல் ஆம்பூர் கிராமத்தில் வெள்ளரியின் தரத்தை உயர்த்தவும் மகசூலை அதிகரிக்கும் செயல்முறை மற்றும் செயல் விளக்கம், எஸ் தங்கப்பழம் வேளாண் கல்லூரி மாணவிகளால் செய்து காண்பிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கடையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் பொன் ராணி மற்றும் துணை வேளாண்மை அலுவலர் பா சண்முகசுந்தரம்  செய்து கொடுத்தனர்.

மாணவிகள் அபர்ணா ,சுருதி,இலக்கியா, காவியா,ராஷ்மி, அமல் சாலிகா ,சுபத்ரா, ஜெயலட்சுமி,சாருலதா, சத்ய சோபிகா, ஆரியா சந்திரன்,சுவேதா ஆகியோர் ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின்கீழ் வெள்ளரியின் தரத்தை உயர்த்தவும் மகசூலை அதிகரிக்கவும் செயல் விளக்கம் அளித்தனர்.

பந்தலில் காய்த்த வெள்ளரியில் ஒரு கல்லை கட்டி தொங்கவிடுவதன் மூலம் அதன் நீளம் அதிகரிக்கும் இடை உயரும் அதன் தரம் உயரும்.மேலும் வெள்ளரிக்காய்களை பாலிதீன் கவர் கொண்டு மூடுவதன் மூலம் பழ ஈக்கள் தாக்கத்தை குறைக்கலாம் . இதனால் வெள்ளரியில் மகசூல் அதிகரிக்கும் வெள்ளரியின் தரம் உயரும் மேலும் சந்தை விலை உயரும் என மாணவிகளால் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News