ஆலங்குளம்: இரவு நேர வியாபாரம்-கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ஆலங்குளம் பகுதிகளில் இரவு நேரங்களில் வியாபாரம் நடைபெற்று வருகிறது.;
ஆலங்குளம்-இரவு நேரங்களில் வியாபாரம் ஜோர்
தமிழக அரசு கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில இடங்களில் விதிமுறை மீறல்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் இரவு நேரங்களில் ஊரங்கு விதியை பின்பற்றாமல் வியாபரம் நடைபெற்று வருகிறது. பீடிகடைகளும் செயல்படுவதால் நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கை இல்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் கடந்த ஒரு வாரத்தில் சுமார் பேர் 300 நோய் தொற்றால் இறந்ததாக கூறப்படுகிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்று பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்