குற்றங்களை தடுப்பதில் காவல்துறையுடன் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என தென்காசி எஸ்பி பேசினார்.
தென்காசி மாவட்டம் சுரண்டையில் குற்றச்செயல்களை தடுக்க 16 சிசிடிவி கேமராக்கள், பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஒலிபெருக்கி ஆகியவையும், மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி நாடார், மற்றும் ப்ரியா குரூப்ஸ் சார்பில் அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தையும் தென்காசி மாவட்ட எஸ்பி., சுகுணா சிங் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது :- இன்றைய நவீன கணினி உலகில் வளர்ந்த நாடுகளில் குற்றங்களை குறைக்கவும் அவைகளை கண்டுபிடிக்கவும் மூன்றாவது கண் என்று சொல்லப்படும் சிசிடிவி கேமராக்கள் முக்கிய பங்கினை வகிக்கிறது.
குற்றங்களை தடுப்பதில் பொதுமக்கள் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். காவல்துறை எப்போதும் பொதுமக்களின் நண்பனாக செயல்படும் என்றார். முன்னதாக சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி வரவேற்றார். டிஎஸ் குழுமத்தின் சார்பில் ஸ்டீபன் ரத்தீஸ் முன்னிலை வகித்தார்.இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.