கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்தில் 19 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்பு

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்தில் 19 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.;

Update: 2021-10-20 15:00 GMT

பைல் படம்

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்தில் 19 ஒன்றிய கவுன்சிலர் பதவிகள் உள்ளது. இதில் திமுக 9 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் 4 இடங்களில் வெற்றி பெற்றது. சுயேச்சை வேட்பாளர்கள் மூன்று இடங்களிலும், அதிமுக வேட்பாளர்கள் 3 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளனர்.

ஜான்சி ஜெயமலர், தர்மராஜா, நான்சி, ஹேமா, மகேஸ்வரி, காவேரி ராஜேஸ்வரி, வல்லவன் ராஜா, நாகராஜன் ஆகிய திமுக ஒன்றிய கவுன்சிலர்கள், கனக ஜோதி, முத்துக்குமார், மரியசெல்வம், ராதா குமாரி ஆகிய காங்கிரஸ் ஒன்றிய கவுன்சிலர்கள்.

புவனா அருமை, சுரேஷ் லிகோரி ஆகிய அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள், முருகேசன் உதயசூரியன், சரவணன் ஆகிய சுயேச்சை ஒன்றிய கவுன்சிலர்கள் என 19 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். இவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

Tags:    

Similar News