10 மடங்கு கூடுதலாக வேலை செய்ய தூண்டும்: கனிமொழி
திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் மகள் வீட்டில் தற்போது ரெய்டு நடக்கிறது இது போன்ற மிரட்டல்கள் எங்களிடம் செல்லாது, எங்களை முடக்க முடியாது. 10 மடங்கு கூடுதலாக வேலை செய்ய தூண்டும் என கனிமொழி ஆலங்குளத்தில் பிரச்சாரம்.;
தமிழகத்தில் வரும் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிடும் பூங்கோதை ஆலடிஅருணாவுக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு திமுக மகளிர் அணி தலைவியும் எம்பியுமான கனிமொழி ராம்நகரில் பிரச்சாரத்தை துவங்கினார்.
அப்போது அவர் பேசும் போது திமுகதான் வெற்றி பெற வேண்டும் என மக்கள் முடிவெடுத்து விட்டார்கள் எனவும், அனைத்து ரேசன் கடைகளில் தரமற்ற பொருட்களை வினியோகம் செய்து வருகின்றது, இதனால் ஏழை எளிய மக்கள் மிகுந்த பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் வேலை வாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள் தவிக்கின்ற நிலையில் வெளி மாநில இளைஞர்கள் வேலைக்கு வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் பெட்ரோல் டீசல் விலை உயர்கிறது, ஆனால் விளம்பத்தில் மட்டுமே வெற்றி நடை போடுகிறது என்று ஒடுகிறது. திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு நகை கடன் ரத்து செய்யப்படும், மகளிர் இளையர்களுக்கு சுய உதவி குழுக்கள் அமைக்கப்படும். 3 லட்சத்து 50 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பபடும் என்றார். இன்று திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் மகள் வீட்டில் தற்போது மத்திய அரசின் துணையோடு ரெய்டு நடக்கிறது இது போன்ற மிரட்டல்கள் எங்களிடம் செல்லாது எங்களை முடக்க முடியாது இதனால் 10 மடங்கு கூடுதலாக வேலை செய்ய தூண்டும் என தொண்டர்கள் மத்தியில் தெரிவித்தார்.