தென்காசி விவசாயிகள் -ஊரடங்கு காலத்தில்-வட்டார தோட்டக்கலைத்துறை உதவி.

தென்காசி மாவட்ட தோட்டக்கலைத்துணை இயக்குநர் சு.ஜெயபாரதிமாலதி விவசாயிகளுக்கு வேண்டுகோள்.

Update: 2021-05-20 07:56 GMT
தென்காசி விவசாயம் (பழைய படம்)

தென்காசி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டு வரும் காய்கறிகள், பழங்கள், மலர்கள், நறுமண மற்றும் வாசனை திரவிய பயிர்கள் உள்ளிட்ட விளை பொருள்களை ஊரடங்கு காலத்தில் தங்களது இடத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல அனுமதிச்சீட்டு தேவைப்படும் விவசாயிகள் அனைவரும் தங்களது  வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு உடனடியாக பெற்றுக்கொண்டு பயன் பெறலாம்.

தற்போது பரவி வரும் கெரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இத்தகைய காலத்தில் வேளாண்-தோட்டக்கலை விளைபொருள்களான தக்காளி, கத்தரி, மிளகாய்  போன்ற காய்கறிகள், மா, நெல்லி, கொய்யா போன்ற பழ வகைகள் மற்றும் மல்லிகை, முல்லை உள்ளிட்ட மலர்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள் வெளி மாவட்டங்களுக்கு கொண்டு சென்று சந்தைப்படுத்த விரும்பினால் அந்த விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் விளைபொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு நம் மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் ஒவ்வொரு வட்டாரத்திலும் உரிய அலுவலர்களால் அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த அனுமதிச்சீட்டு பெற விரும்பும் விவசாயிகள், உரிய விபரங்களோடு தங்களது வட்டார உதவி இயக்குநர்களை பின்வரும்  அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டால் உடனடியாக அனுமதிச்சீட்டு வழங்கப்படுமெனவும் இதனை பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெறுமாறு  விவசாயிகளை தென்காசி மாவட்ட தோட்டக்கலைத்துணை இயக்குநர் சு.ஜெயபாரதிமாலதி விவசாயிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புக்கு :

வட்டாரஉதவி இயக்குநர்கள் அலைபேசி எண்கள் விபரம்

1. ஆலங்குளம் 9360598993,

2.கடையம் 8610022623,

3.கடையநல்லூர் மற்றும் செங்கோட்டை 9994710257,

4.சங்கரன்கோவில் 6381364503,

5.மேலநீலிதநல்லூர் 6369726724,

6.கீழப்பாவூர் மற்றும் தென்காசி 6383050078

7.குருவிகுளம் 8220547506,

8. வாசுதேவநல்லூர் 8072218387

Tags:    

Similar News