குப்பைகளை பிளாஸ்டிக் கழிவுகளோடு எரித்து சீர்கேடு உருவாக்கும் நிர்வாகம்.

கடையம் பகுதியில் மக்களைக் காக்க வேண்டிய உள்ளாட்சி நிர்வாகமே விதிமுறைகளை மீறி குப்பைகளை எரித்து வருகிறது

Update: 2021-05-20 03:02 GMT

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் கரும்புகை மண்டலம் -பொதுமக்கள் பாதிப்பு.

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் கருப்பு புகை மண்டலம் எழுந்து சுற்றுப்புறப் பகுதிகளில் சுவாசிக்க முடியாத வண்ணம் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மக்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர்

தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழக்கடையம் பஞ்சாயத்தில் குப்பை கழிவுகளை, தென்காசி செல்லும் சாலையில் உள்ள செட்டிமடம் பகுதியில் குவித்து மக்கும் குப்பை, மக்கா குப்பை என தனித்தனியே பிரிக்கும் கூடங்கள் அமைத்துள்ளனர்

ஆனால் அதைப் பயன்படுத்தாமல் குப்பைகளை பிளாஸ்டிக் கழிவுகளோடு சேர்த்து எரித்து வருகின்றனர். இதனால் கருப்பு புகை மண்டலம் எழுந்து சுற்றுப்புறப் பகுதிகளில் சுவாசிக்க முடியாத வண்ணம் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர். தென்காசி சாலையில் செல்லும் வாகனஓட்டிகளும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

மக்களைக் காக்க வேண்டிய உள்ளாட்சி நிர்வாகமே இவ்வாறு விதிமுறைகளை மீறி குப்பைகளை எரித்து வருகிறது. அதனால் அரசு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags:    

Similar News