மருத்துவமனை கண்காணிப்பாளர் - கனிவான வேண்டுகோள் இதுதான்.

மருத்துவரின் மனிதாபிமானம்.;

Update: 2021-05-17 15:38 GMT

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் இரா. ஜெஸ்லின் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொது மக்களுக்கு தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் இரா. ஜெஸ்லின் வேண்டுகோள் கொரோனா தொற்றின் 2வது அலை அதிவேகமாக பரவிவருகிறது.

பொது மக்கள் ஆரம்ப நிலையிலேயே கொரோனா RTPCR பரிசோதனையையும் சிகிச்சையையும் தாமாக முன்வந்து செய்யாத காரணத்தினால் நோய் முற்றுதலும் இறப்புகளும் அதிகமாக நிகழ்கின்றன.

தயவுசெய்து பொதுமக்கள் காய்ச்சல் இருமல் தலைவலி போன்ற உபாதைகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று பரிசோதனை செய்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். கொரோன தொற்று உள்ளவர்களும் ,எந்த நோய் அறிகுறிகளும் இல்லாதவர்களும் ,சிறிய அளவிலான உபாதைகள் உள்ளவர்களும் மட்டுமே வீடுகளில் தங்களை மருத்துவரின் ஆலோசனைபடி தனிமை படுத்தி கொள்ள வேண்டும்.

சிறிய அளவிலான நோய் உபாதைகள் உள்ளவர்களும் ,மற்ற பிற நோய்கள் கூடுதலாக உள்ளவர்களும், குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்களும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் நிலையங்களில் (Covid care centre)சேர்ந்து கொள்ள வேண்டும்.

இருமல் விடாமலும், சளி தொந்தரவு அதிகமாகவும் காய்ச்சல் குறையாமல் இருக்கும் நபர்கள் கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டாலும், செய்யப்படாவிட்டாலும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும். கால தாமதமாக சிகிச்சை எடுக்கும் பட்சத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு நோய் முற்றும் அபாயம் ஏற்படுகிறது.

மூச்சு திணறல் ஏற்பட்டபின் மருத்துவமனையில் போர்க்கால அடிப்படையில் அனைத்து வசதிகளும் கூடிய சிகிச்சைகள் செய்தாலும் குணமாக்குவது கடினமாக இருக்கிறது. எனவே பொதுமக்கள் மூச்சு திணறல் ஏற்படும் வரை தாமதிக்காமல் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெறுவதன் மூலம் உயிர் இழப்புகளை தவிர்க்கலாம்.

குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் நோய்தொற்று காலத்தில் தினமும் சர்க்கரை நோய் அளவை பரிசோதித்து அதற்கான சிகிச்சையை சரியான முறையில் செய்ய வேண்டும். பொது மக்கள் அரசு வழிகாட்டுதலாகிய சமூக இடைவெளி, முக கவசம், கைக்கழுவுதல், கொரோனRT PCR பரிசோதனை, வீடுகளில் தனிமை படுத்துதல், கொரோன சிகிச்சை மையங்களில் தனிமைப்படுத்துதல், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று கொள்ளுதல் என அரசு கூறியுள்ள வழிகாட்டுதல்களின்படி நடந்தால் இப்பெருந்தொற்றில் இருந்து எளிதாக மீண்டுவிடலாம் என மரு.இரா.ஜெஸ்லின் வேண்டி கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News