முதல்வர் தேர்தல் பரப்புரை செய்யும் இடங்கள்: அமைச்சர்கள் ஆய்வு

Update: 2021-02-16 16:27 GMT

தென்காசி மாவட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் பிரச்சாரங்கள் நடைபெறும் இடங்களான ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில் தமிழக அமைச்சர்கள் ஆர் பி உதயகுமார், கடம்பூர் ராஜு, ராஜலட்சுமி, மாவட்டச் செயலாளர்கள் செல்வ மோகன்தாஸ் பாண்டியன், கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா ஆகியோர் இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டனர். இந்நிகழ்வில் தென்காசி மாவட்டத்தில் உள்ள அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News