தென்காசி மாவட்டத்தில் கீழப்பாவூரில் உள்ளது புகழ்மிக்க நரசிம்மர் ஆலயம். 16 திருக்கரங்களுடன், இரண்யனை வதம் செய்யும் கோலத்தில் இங்கு நரசிம்மர் அருள்கிறார். "நாளை என்பது நரசிம்மனிடத்தில் இல்லை" என்பது இங்கு வழிபாடு செய்யும் பக்தர்களின் நம்பிக்கை.. அப்படி வேண்டுவதை உடனடியாக தருபவர் இந்த நரசிம்மர். ஸ்டாலினுடன் அரசியல் பயணத்தின் போது உடன் வந்திருக்கும் துர்கா ஸ்டாலின் இந்த ஆலயத்தில் நரசிம்மரை இன்று வழிபாடு செய்தார்.