தென்காசி வட்டார நூலகமும், நடராஜ் அகாடமியும் இணைந்து தென்காசி வட்டார நூலகத்தில் இலவச பயிற்சியினை தொடங்கவுள்ளது. இதனைத் தொடர்ந்து வாரந்தோறும் புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். இப்பயிற்சியின் தொடக்க விழா வரும் 31 ஆம் தேதி வட்டார நூலகத்தில் நடைபெறுகிறது. இந்த இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ, மாணவிகள் 82202 75333, 99443 17543 என்ற எண்களுக்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.
கடந்த மூன்று ஆண்டுகளில் தென்காசி நூலகத்தில் நடைபெற்ற இலவச பொதுத்தேர்வு பயிற்சி வகுப்பில் பயின்றவர்களில் 85 பேர் அரசுப்பணி பெற்றுள்ளனர் என்பது பாராட்டுக்குரியது.