குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

Update: 2021-01-04 05:41 GMT

வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றால அருவிகளில் சுற்றுலாபயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் தென்காசி, செங்கோட்டை, குற்றாலம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மெல்லிய சாரல் மழை பெய்து கொண்டிருப்பதால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. பாதுகாப்பு வளையத்தை தாண்டி தண்ணீர் கொட்டுவதால் குற்றாலம் மெயின்அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News