தென்காசி நூலகத்தில் மாணவர்களுக்கு மாதிரி தேர்வு
தென்காசி வ.உ.சி வட்டாரநூலகம் சார்பில் ஆன்லைன் டெஸ்ட் மற்றும் குரூப் 1 ற்கு இலவச மாதிரி தேர்வு நடத்தப்பட்டது. மாவட்ட அளவில் நடைபெற்ற தேர்வில் சிறப்பாக தேர்வெழுதிய மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசளித்து ஊக்கப்படுத்தினார்.;
தென்காசி வ.உ.சி வட்டாரநூலகம் சார்பில் ஆன்லைன் டெஸ்ட் மற்றும் குரூப் 1 ற்கு இலவச மாதிரி தேர்வு நடத்தப்பட்டது. மாவட்ட அளவில் நடைபெற்ற தேர்வில் சிறப்பாக தேர்வெழுதிய மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசளித்து ஊக்கப்படுத்தினார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் வாழ்த்தி பேசிய போது, தான் தினமும் நூல்களை படித்து வருவதாகவும், நூலகம் மூலம் தான் வெற்றி அடைந்துள்ளதாகவும் கூறினார். அதுபோல் தேர்விற்கு தயாராகிவரும் இளைஞர்கள் தொடர் முயற்சியுடன் படிக்க வேண்டும். தொடர்ந்து படிப்பதின் மூலம்தான் படிப்பது எளிதாகும். அனைவரும் போட்டி தேர்வில் வெற்றி பெற எளிதாகும். நான் இரண்டு புத்தகங்கள் எழுதி வெளியிட்டு உள்ளதும், தென்காசி நூலகத்தில் புரவலராக இணைந்துள்ளதும் பெருமையளிக்கிறது. தேர்வெழுதிய 180 பேர்களும் மெயின் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என கூறினார்.
விழாவில் மாவட்டநூலக அலுவலர் இரா.வயலட், ஆய்வாளர் கணேசன், வட்டாரநூலகர் பிரமநாயகம், கிளைநூலகர் சுந்தர், வெற்றிவேலன் வாசகர்வட்ட துணைத்தலைவர் அருணாசலம், மூகைதீன், அரசு அலுவலர் ஒன்றிய மாவட்டத்தலைவர் சிவசுப்பிரமணியன், நடராஜ் அகாடமி இயக்குநர்கள் நடராஜ் சுப்பிரமணியன், அலெக்ஸ், சிவா, அபெக்ஸ் அகாடமி ராம சுப்பிரமணியன், ஆகாஷ் அகாடமி இயக்குனர் மாரியப்பன், நூலகர்கள் ஜீலியாராஜசெல்வி, நிஹ்மத்துன்னிஸா, ராஜேஸ்வரி, பாலசுப்பிரமணியன், முத்துபாண்டி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
நடராஜ் அகாடமி சார்பில் 2021 ல் ஒராண்டிற்கு தென்காசி நூலகத்தில் அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி அளிப்பதாக உறுதியளித்து அதன் இயக்குநர் ஒப்புதல் கடிதம் வழங்கினார். இந்த அகாடமி மாநில அளவில் முதலிடம் பெற்று முதலமைச்சரிடம் விருது வாங்கியது குறிப்பிடத்தக்கது. தேர்வில் கலந்து கொண்ட 185 பேருக்கும் வினாவிடை தொகுப்பு புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது.